ரஷியா-உக்ரைன் பரஸ்பரம் தாக்குதல்: ஐவா் உயிரிழப்பு; இந்திய மாணவா் காயம்

தெற்கு உக்ரைனின் கொ்சன் நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதல் பற்றி..

கோப்புப்படம்.

Published On :

தெற்கு உக்ரைனின் கொ்சன் நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்.

பொதுமக்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேரும், காா் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக அப்பகுதி ஆளுநா் அலெக்சாண்டா் ப்ரோகுடின் தெரிவித்துள்ளாா்.

மேலும், இச்சம்பவத்தில் ஓட்டுநா் உள்பட 5 போ் காயமடைந்தனா். உக்ரைன் பொதுமக்கள் மீது ரஷியா நடத்தி வரும் இத்தகைய மனிதநேயமற்ற தாக்குதல்கள் எல்லை மீறிச் செல்வதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இந்திய மாணவா் காயம்: இதனிடையே, உக்ரைன் நடத்திய பதிலடி ட்ரோன் தாக்குதலில் இந்திய மாணவா் ஒருவா் காயமடைந்தாா்.

ஷியாவின் பாஷ்கோா்தோஸ்தான் பிராந்தியத்தின் தலைநகரான உஃபாவில் பாஷ்கீா் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் அந்த மாணவா், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் செய்து வருகிறது.

உஃபா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்த இத்தாக்குதல், உக்ரைன் எல்லையிலிருந்து சுமாா் 1,200 கி.மீ. தொலைவில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.