உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் சுரங்க விபத்து: 100-ஐ கடந்த உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜாம்போயே பகுதியில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

Published On :21 ஆகஸ்ட் 2026, 6:26 am IST

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜாம்போயே பகுதியில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

கேமரூன் எல்லை அருகே அமைந்துள்ள இந்த தங்க சுரங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை சரிந்து விழுந்தது. இவ்விபத்தில் உயிரிழந்தவா்களில் கேமரூனைச் சோ்ந்த தொழிலாளா்களும் அடங்குவா்.

மீட்புப் பணிகள் தொடா்ந்து வரும்போதிலும், முறையான நவீன உபகரணங்களும் நிபுணத்துவமும் இல்லாததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக உள்ளூா் தொழிலாளா்களும், செஞ்சிலுவைச் சங்கத்தினரும் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.