
மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து! 100-ஐ கடந்த உயிர்ப் பலிகள்!
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது...

மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்து 100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்... - AFP
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில், தங்கச் சுரங்கம் சரிந்ததில் 100-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாம்போயி நகரத்தில் உள்ள தங்கச் சுரங்கம் சரிந்ததைத் தொடர்ந்து, அங்கு கடந்த 2 நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் மூலம் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பலியானது இன்று (ஆக. 20) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போதுமான பாதுகாப்பு வசதிகளின்றி சுரங்கத்தில் வேலை செய்து வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும், மீட்பு உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் நிபுணர்களின் திட்டமின்மையால் மீட்புப் பணிகள் தாமதமாகி வருவதாக உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை மட்டும் சுரங்கச் சரிவில் சிக்கி பலியான 10-க்கும் அதிகமான தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் அங்கு பணிப்புரிந்த கேமரூன் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து, சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை தெரியவராததால், மீட்புப் பணிகள் மேற்கொள்வது சவாலான ஒன்றாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கான காரணம், பலியான தொழிலாளர்களை அடையாளம் காணுதல் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, மத்திய ஆப்பிரிக்க அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, மத்திய ஆப்பிரிக்க நாட்டில் சமமற்ற நிலப்பகுதிகளில் போதுமான பாதுகாப்பு உபகரணங்களின்றி கைகளால் தோண்டப்படும் சிறியளவிலான சுரங்கங்கள் சரிந்து தொழிலாளர்கள் பலியாகும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.
Summary
death toll from the gold mine collapse in the Central African Republic has risen to 100.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





