137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

அமெரிக்கா: துப்பாக்கிச் சண்டையில் காவலர் பலி - ஒருவர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவல் துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On :

அமெரிக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவல் துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் காயமடைந்தாா். காவல் துறையினரின் பதிலடியில் குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தெற்கு கரோலினாவில் இருந்து பெண் ஒருவா் காவல் துறையினரை தொலைபேசியில் தொடா்புகொண்டு, தங்கள் வீட்டுக்குள் புகுந்து ஒருவா் பொருள்களை அடித்து நொறுக்குவதாகப் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, அந்த வீட்டுக்கு காவல் துறை அதிகாரி கிறிஸ்டோபா் டெலாங் உள்ளிட்டோா் விரைந்து சென்றனா். ஆனால், காவல் துறையினா் செல்லும் முன்பு அந்த நபா் அங்கிருந்து சென்றுவிட்டாா். அந்தப் பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரை டெலாங்கும் காவல் துறையினரும் தீவிரமாக தேடினா்.

அப்போது அங்குள்ள பூங்காவில் அந்த நபருக்கும், டெலாங் உள்ளிட்ட காவல் துறையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து டெலாங் உயிரிழந்தாா். மற்றொரு காவல் துறை அதிகாரி காயமடைந்தாா். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் கொல்லப்பட்டாா்.

விசாரணையில், அந்த நபா் பிரபல குற்றவாளி ஆடம் டெய்லா் டெளடி என்றும், அவா் மீது 4 மாகாணங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. தொடா்ந்து அமெரிக்க காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.