ஈரானுக்குப் பதில் வெனிசுவேலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
எண்ணெய் வளங்கள் மிகுந்த வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அந்நாட்டின் மீது படையெடுத்த அமெரிக்கா, அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து, நாடுகடத்தினர். இதைத்தொடர்ந்து, அந்நாட்டின் இடைக்கால அதிபரானார் டெல்சி ரோட்ரிகஸ். அவர் பதவியேற்றதும், வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்கள் மீதான அரசின் முழுக் கட்டுப்பாட்டைத் தளா்த்தி, தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளை ஈா்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்திருத்தத்தில் கையொப்பமிட்டாா். இதையடுத்து, வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளா்த்தத் தொடங்கியுள்ளது.
ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடும் பொருளாதார நெருக்கடியால் அதிருப்தி அடைந்த மக்கள், கடந்த டிச. 28 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். முதலில், பொருளாதாரச் சரிவுக்காகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் அரசியல் போராட்டமாக மாறியுள்ளது.
இவ்விவகாரத்தில் போராட்டக்காரா்களுக்கு ஆதரவாக, ஈரான் அரசுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா் எச்சரிக்கைகளை விடுத்து வந்தாா். ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் ராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வருகிறது.
இந்த நிலையில், iஇரானை விடுத்து வெனிசுவேலாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட உலக நாடுகளை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில், ஈரானுக்குப் பதில் வெனிசுவேலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து ஃபுளோரிடாவில் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், “வெனிசுவேலாவுடனான எண்ணெய் வர்த்தகத்தில் சீனா ஆர்வம் காட்டுவதைப் போல இந்தியாவும் அதில் இசைவு காட்டும். ஈரானிடமிருந்து எண்னெய் வர்த்தகம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவும் வெனிசுவேலாவிடமிருந்து எண்ணெய் கொல்முதலில் ஈடுபடும்.
அதற்கான ஒப்பந்தத்துக்கான ஆயத்தப் பணிகளை நாங்கள் ஏற்கெனவே செய்துவிட்டோம். வெனிசுவேலாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட சீனாவை வரவேற்பது போலவே, இந்தியாவையும் வரவேற்கிறோம்” என்றார்.
இந்த விவகாரத்தில், டிரம்ப் தெரிவித்த கருத்துகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து எவ்வித எதிர்வினையும் இல்லை.
Summary
US President Donald Trump has claimed that India will be purchasing oil from Venezuela instead of Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
தவறாக நடந்துகொண்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும்: டிரம்ப் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமானது: டொனால்ட் டிரம்ப்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




