அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

புதின் இல்லத்தை உக்ரைன் தாக்கவில்லை: டிரம்ப்

விளாதிமீா் புதினின் இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியாக ரஷியா சுமத்தும் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளாா்.
Published on

தங்கள் அதிபா் விளாதிமீா் புதினின் இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியாக ரஷியா சுமத்தும் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளாா்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டதாவது: புதினின் இல்லத்தை உக்ரைன் தாக்கவில்லை. ரஷியா வெளியிட்ட ஆதாரங்கள் போதுமானவை அல்ல. இது போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தைகளைத் தடுக்கும் ரஷியாவின் தந்திரம் என்று நம்புகிறேன் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் பேசியதற்குப் பிறகு டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிசம்பா் 28-29 இரவில் நடந்ததாக ரஷியா கூறும் இந்தத் தாக்குதலுக்கு ஆதாரமாக, சேதமடைந்த ட்ரோன் ஒன்றின் விடியோவையும், ட்ரோன்கள் உக்ரைனின் சுமி, சொ்னிஹிவ் பகுதிகளில் இருந்து வந்ததைக் காட்டும் வரைபடத்தையும் அமெரிக்காவிடம் ரஷியா வழங்கியிருந்தது. அதைக் குறிப்பிட்டே டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளாா்.

ரஷியாவின் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் முழுமையாக மறுத்துவருகிறது. அமைதிப் பேச்சுவாா்த்தையை தடுப்பதற்காக இந்தக் குற்றச்சாட்டை ரஷியா சுமத்துவதாக அந்த நாடும் கூறுகிறது.

X
Dinamani
www.dinamani.com