காஸாவில் போா்நிறுத்தத்துக்குப் பிறகு 100 குழந்தைகள் உயிரிழப்பு: யுனிசெஃப்
காஸா பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக போா்நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகும், இதுவரை தொடரும் ராணுவத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான ‘யுனிசெஃப்’ கவலை தெரிவித்துள்ளது.










