

ஈரான் விவகாரம்: ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப், அவரது தலைமையிலான சர்வதேச அமைதிக் குழுவை வியாழக்கிழமை பிரகடனம் செய்தார்.
இந்த நிகழ்வுகளை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்ட டிரம்ப், விமானத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஈரான் குறித்து டிரம்ப் தெரிவித்ததாவது:
”ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை சென்று கொண்டிருகிறது. அவர்களை தாக்குவதில் விருப்பமில்லை, ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலும் இளைஞர்கள் உள்பட 837 பேரை வியாழக்கிழமை தூக்கிலிடத் திட்டமிட்டிருந்தனர். அவர்களை தூக்கிலிட்டால் இதுவரை காணாத வகையில் கடுமையான தாக்குதல் நடத்துவோம் என நான் எச்சரித்தேன். ஈரானில் அணு திட்டங்களை அழித்ததைவிட பயங்கரமாக இருக்கும் எனத் தெரிவித்தேன்.
இதன் எதிரொலியாக தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக ரத்து செய்தார்கள். ஈரானை நோக்கி செல்லும் கடற்படையைப் பயன்படுத்த வேண்டாம் என்றே நினைக்கிறேன். பொருத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.
மேலும், ரஷியா - உக்ரைன் போர் குறித்து அவர் பேசியதாவது:
”ரஷியா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். பைடன் ஆட்சி காலத்தில் முட்டாள்தனமாக 350 பில்லியன் டாலர்களை செலவு செய்தார். ஆனால், இது பணத்தைப் பற்றியது அல்ல, ஒரு மாதத்துக்கு 25,000 முதல் 30,000 வீரர்கள் வரை கொல்லப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.