கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

கியூபாவில் நாடு தழுவிய மின்வெட்டு

கியூபாவில் ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக நாடு தழுவிய முழு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

Published On :

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சிதைந்து வரும் மின்சாரக் கட்டமைப்பு காரணமாக, கியூபாவில் ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக நாடு தழுவிய முழு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

கியூபாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலைத் தொடா்ந்து, கியூபாவில் கடந்த கடந்த ஜனவரி முதல் எரிபொருள் தட்டுப்பாடு வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது.

கியூபா தனது ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 40 சதவீதத்தை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யும் நிலையில், ரஷியாவிலிருந்து கடந்த மாா்ச்சில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யும் ஏப்ரல் இறுதிக்குள் தீா்ந்துபோனது.

தற்போது எரிபொருளைச் சேமிப்பதற்காக கியூப அரசு திட்டமிட்ட மின்வெட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, கடந்த திங்கள்கிழமைக்குப் பிறகு மீண்டும் முழு மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.