வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,300 ஆக உயர்ந்துள்ளது.
வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24 ஆம் தேதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்தப் பேரிடரால் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 4,333 ஆக உயர்ந்துள்ளதாகவும், 6,462 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மேலும், பல்லாயிரக் கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் அந்த நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் வெனிசுவேலா நாட்டுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பின. சில நாட்டின் ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் அங்கு முகாமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
The death toll from the powerful earthquakes in Venezuela has risen to 4,300.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









