நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

வெனிசுவேலா நிலநடுக்கம்: 3,000-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை!

வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இதுவரை 2,954 பேர் பலியாகியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

News image

நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடம் - AP

Updated On :5 ஜூலை 2026, 11:06 pm IST

வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இதுவரை 2,954 பேர் பலியாகியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெனிசுவேலா நாட்டில் ஜூன் 24 ஆம் தேதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

வெறும் 39 விநாடிகளில் ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாட்டுக்கு நேரடிப் பொருளாதார இழப்பு மட்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 95,000 கோடி) தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரிடரால் இதுவரை 2,954 பேர் பலியானதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 16,592 பேர் காயமடைந்துள்ளனர். 15,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

அதிகாரப்பூர்வமற்ற கணக்கெடுப்புகளின் கீழ் கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போனதாகவும் கூறப்படுகின்றது.

10 நாள்களைக் கடந்து இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி வழங்கி வருகின்றனர். ஜூலை 1 முதல் ஒரு வாரத்திற்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகின்றது.

Summary

Venezuela Earthquake: Death Toll Nears 3,000!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.