தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

வெனிசுவேலா நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 589ஆக உயர்வு

வெனிசுவேலா நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 589-ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2026, 6:48 pm IST

வெனிசுவேலா நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 589-ஆக உயர்ந்துள்ளது.

​​உலகெங்கிலும் இருந்து மீட்புக் குழுவினரின் வருகையை வரவேற்ற அவர், அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அறிவிப்பை வெளியிட்டார்.

நாங்கள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கப் போகிறோம் எனக் கூறிய அவர் நாங்கள் இந்த பணியில் அயராது உழைத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் நிலநடுக்கத்துக்கு இதுவரை 2,980 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுவேலாவில், அண்மையில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 7.2 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவான நிலையில், சில நிமிடங்களில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மாயமாகியுள்ள தங்கள் உறவினர்களை மக்கள் தேடி வருகின்றனர்.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், மீட்புப் படையினரும் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி மேலும அதிகரிக்கக் கூடும் என அச்சம் நீடிக்கிறது.

இத்துயரமான நேரத்தில் வெனிசுலாவுக்குப் பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

அமெரிக்கா, கத்தார், மெக்ஸிகோ, எல் சால்வடார் உள்ளிட்ட நாடுகள் தங்களின் மீட்புக் குழுக்களையும் மருத்துவ உதவிகளையும் அனுப்பி வருகின்றன.

Summary

The death toll from two powerful earthquakes in Venezuela rose to 589, with 2,980 injured, acting President Delcy Rodriguez said early Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.