அமெரிக்கா மற்றும் இராக் இடையே எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் கீழ் 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராக் பிரதமர் அலி அல்-சைதி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் சந்தித்த அவர் இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏற்கெனவே, முன்னாள் அதிபர் சதாம் உசேன் காலத்தில் நடைபெற்ற இராக் மீதான அமெரிக்காவின் போரினால் அந்நாடு கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால், வறுமை, ஊழல் போன்ற விவகாரங்களால் இராக் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இராக் ஆகிய நாடுகளின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு, ஒத்துழைப்பு உள்பட 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக, இராக் பிரதமரின் அலுவலகம் இன்று (ஜூலை 18) அறிவித்துள்ளது.
இத்துடன், இராக்கின் எண்ணெய் மற்றும் மின்சார அமைச்சகத்துக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த எக்ஸான் மொபில், கேபிஆர், ஷெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், இராக் மற்றும் சிரியா இடையில் கச்சா எண்ணெய் குழாய் தொடரை அமைப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதில், சர்வதேச செய்ற்கைக்கோள் தொலைத்தொடர்பில் முன்னணி வகிக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துடன் இராக் அரசு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் ஆதரவுடன் தொழிலதிபரான அலி அல்-சைதி கடந்த மே மாதம் இராக் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
48 major agreements have been signed between the United States and Iraq, covering sectors including oil production.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானை முழுவதுமாக அழித்தோம்! அமெரிக்காவின் 250வது சுதந்திர நாள் விழாவில் டிரம்ப் பேச்சு!

கமேனியின் இறுதிச் சடங்கிற்குப் பிறகே அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சு!

அமெரிக்காவுக்காக பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்! டிரம்ப் அறிவுறுத்தல்
எனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்! டிரம்ப் எச்சரிக்கை!
விடியோக்கள்

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk




