அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கர்நாடக முதல்வரான டி.கே. சிவகுமாருக்கு விஜய் வாழ்த்து!கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!23,400 புள்ளிகளை எட்டிய நிஃப்டி, சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவுகரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி: முதல்வர் விஜய்கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் டி.கே. சிவகுமார்!
/

மேற்காசிய போர் காரணமாக வங்கதேசத்தில் மின் கட்டணம் 16% உயர்வு!

வங்கதேசத்தில் மின் கட்டணத்தை 16% உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

வங்கதேச தலைநகரில் எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் - AFP

Updated On :3 ஜூன் 2026, 7:08 pm IST

மேற்காசிய போர் காரணமாக வங்கதேசத்தில் மின் கட்டணத்தை 16% உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தில் கிட்டத்தட்ட 17 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்நாடு எரிபொருள் தேவைக்குப் பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் பணவீக்கம் 9.04% ஆக இருந்த நிலையில், பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக மின் கட்டணத்தை 16% உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மேற்கொண்டு அந்நாட்டு அரசு சுமையை ஏற்றியுள்ளது.

இரு நாள்களுக்கு முன் மண்எண்ணெய் விலை வங்கதேச ரூபாயில் 130-ல் இருந்து 135 டாகா ஆகவும், பெட்ரோல் விலை 135 இல் இருந்து 140 டாகா ஆகவும் உயர்த்தியிருந்த நிலையில் தற்போது மின் கட்டணத்தை 16% உயர்த்துவதாக வங்கதேச எரிபொருள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரான ஜலால் அகமது அறிவித்துள்ளார்.

வங்கதேச அரசின் மின் மேம்பாட்டு வாரிய தகவலின்படி, மொத்த மின் உற்பத்தித் திறனில் இயற்கை எரிவாயுவிலிருந்து சுமார் 44%, நிலக்கரியிலிருந்து 24 %, எண்ணெய் மற்றும் டீசலிலிருந்து 24%-ம் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். வங்கதேசத்தின் முதல் அணு சக்தி உற்பத்தி நிலையமும் விரைவில் செயல்படத் தொடங்கும் நிலையில் உள்ளது.

கோடைக் காலத்தில் அதிகளவு மின் தேவை அதிகரிப்பதால் அங்குள்ள கிராமப்புறங்களில் அதிகளவு மின் தடை ஏற்பட்டன. ஆனால், தலைநகர் தாக்கா மற்றும் பிற முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்படுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தொடர்பான பிரச்னைகளைச் சமாளிக்க உலக நாடுகளிடம் சுமார் 2 பில்லியன் டாலர் கடனைப் பெற வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது.

Summary

Electricity tariffs in Bangladesh rise by 16% due to the West Asian war

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.