தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

எபோலா பாதிப்பால் முற்றிலும் அழிந்துவிடுவோம்: அச்சத்தில் ஆப்ரிக்க மக்கள்!

ஆப்ரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பால் முற்றிலுமாக அழிய வாய்ப்பிருப்பதாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News image

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் பலியானவரின் இறுதிச்சடங்கில் நிகழ்வில் அழும் உறவினர்கள் - AP

Updated On :3 ஜூன் 2026, 5:51 pm IST

ஆப்ரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பால் முற்றிலுமாக அழிய வாய்ப்பிருப்பதாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் அச்சத்த்ல் உள்ளனர்.

ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டு மோதல்கள் காரணமாக லாட்சக்கணக்காண மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் எபோலா பாதிப்பு காரணமாக அதிகளவில் உயிரிழப்புகளைச் சந்திக்கக்கூடும் என மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

கிங்கோன்ஸ் பகுதியில் 25,000 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள டோர்கஸ் மாபென்ஸி என்கிற பெண் பேசியது உலகம் முழுவதும் ஒருவித அச்ச உணர்வையும், எபோலா பாதிப்பின் அவலத்தையும் வெளிக்காட்டியுள்ளது.

அவர் பேசுகையில், “நாங்கள் மீன்கள் கூட்டத்தைப் போன்று அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், எபோலா பாதிப்பு அதிகரித்தால் நாங்கள் முற்றிலுமாக அழிந்துவிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கோவின் கிழக்குப் பகுதியில் எபோலா மிக வேகமாகப் பரவி வருகிறது. தொற்றும் வகையிலான வைரஸான இது, அங்கு பல உயிர்களை பலியாக்கி வருகின்றது. பல ஆண்டுகளாக அந்நாட்டில் நீடித்து வரும் ஆயுத மோதல்கள் காரணமாக மக்கள் பலரும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் எபோலா தொற்று ஏற்பட்டால் அனைவரும் கொத்துக் கொத்தாக மடியும் நிலை வருமென்று கூறப்படுகிறது.

இடம்பெயர்ந்த மக்களில் 10 லட்சம் பேர் இட்டூரிபகுதியில் உள்ளனர். இந்த மாகாணம் காங்கோவின் கடும் வறுமையான பகுதியாகும்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுபற்றி பேசுகையில், ”காங்கோவின் கிழக்குப் பகுதி, நோய் மற்றும் உள்நாட்டு மோதல் என பேரழிவை எதிர்கொள்கிறது. அங்கு ஏற்படும் மோதல்கள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதைத் தடுக்கின்றன” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், “எபோலா பரவலை எதிர்த்துப் போராட மேலும் சர்வதேச அளவில் உதவியும் நிதியும் தேவை. அதிகாரிகள் மீது அவநம்பிக்கையில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களிடையே இருக்கும் அச்சத்தைத் தணித்து, வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் பரவுவதைத் தடுத்து நிறுத்துவது மிகவும் அவசியமான ஒன்று” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எபோலா வைரஸ் தொற்று பரவல், காங்கோ மற்றும் உகாண்டாவில் மே 15 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை, 61 பேர் எபோலாவால் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 240 பேரின் இறப்பு சந்தேகத்திற்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 359 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

Summary

If Ebola strikes, we will be completely wiped out African people gripped by fear

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.