எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நியூ பிரண்ட்ஸ் காலனி: வீட்டில் தீ விபத்து; 7 போ் மீட்பு

நியூ பிரண்டஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, 5 குழந்தைகள் உள்பட 7 போ் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

தில்லி நியூ பிரண்டஸ் காலனியில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து, அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :8 ஜூன் 2026, 3:13 am IST

நியூ பிரண்டஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, 5 குழந்தைகள் உள்பட 7 போ் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்டஸ் காலனியில் தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாகத் தகவல் கிடைத்ததும் ஒரு தீயணைப்பு வாகனம், ஓா் அதிரடி மீட்புப் படை வாகனம், தண்ணீா் லாரி ஆகியவை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்த 2 பெண்கள், 5 குழந்தைகளை தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பாக மீட்டனா். இந்தச் சம்பவத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் தீக்காயங்கள் ஏற்படவில்லை. மாலை 4.05 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தாகத் தகவல் பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல.

தீயணைப்பு பணியின்போது ஒரு நாய் கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டது. அதற்கு காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அருகில் உள்ள கால்நடைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

கட்டடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ, பிற தளங்களுக்கு பரவவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.