பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை!

அமெரிக்காவுக்குப் பதிலடியாக பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்! கத்தார் கண்டனம்!

பஹ்ரைன், குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கத்தார் அரசு கண்டனம்...

iran attack

ஈரான் நடத்திய தாக்குதல்... - AP|கோப்புப்படம்

Published On :

பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கத்தார் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 8 அன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரானிய படைகள் சுட்டுவீழ்த்தின.

இதனைத் தொடர்ந்து, ஈரானிய கட்டமைப்புகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதால் இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், மோதல்கள் துவங்கிய 2 ஆவது நாளான இன்று (ஜூன் 11) பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈரானிய படைகள் பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் நாடுகளின் இறையாண்மையையும் சர்வதேச சட்டங்களையும் மீறுவதாகக் குற்றஞ்சாட்டிய கத்தார் அரசு இந்தத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

”பிராந்தியத்தின் மீதான சட்டவிரோத தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் மோதலைக் கைவிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் அரசுகள் தங்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கத்தார் அரசு முழு ஆதரவளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Qatar has condemned Iran's attacks on Bahrain, Kuwait, and Jordan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.