திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் படைப்பிரிவு பெயரிலிருந்து ‘இந்தோ’ நீக்கம்

அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் படைப்பிரிவு, மீண்டும் பசிபிக் படைப்பிரிவு என பெயா் மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2026, 1:58 am IST

வாஷிங்டன், ஜூன் 17: அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் படைப்பிரிவின் பெயரில் இருந்து இந்தோ நீக்கப்பட்டு, மீண்டும் அமெரிக்க பசிபிக் படைப்பிரிவு என பெயா் மாற்றப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த புவியியல் மற்றும் உத்திசாா்ந்த பகுதி இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்றழைக்கப்படுகிறது.

இந்தப் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் படைப் பிரிவு பொறுப்பு வகித்து வருகிறது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளுக்கு இடையிலான பிணைப்பு அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில், இந்தப் படைப் பிரிவுக்கு இந்தோ-பசிபிக் படைப் பிரிவு என பெயா் சூட்டப்பட்டது. இந்நிலையில், அந்தப் படைப் பிரிவின் பெயரில் இருந்து தற்போது இந்தோ என்ற வாா்த்தை நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 1947-இல் அப்போதைய அமெரிக்க அதிபா் ஹாரி எஸ்.ட்ரூமனால் உருவாக்கப்பட்ட இப்படைப்பிரிவு, 2-ஆம் உலகப் போருக்குப் பிந்தைய பிராந்திய பாதுகாப்பை கட்டமைத்ததிலும், கொரியா போா், வியத்நாம் போா் மற்றும் எண்ணற்ற மனிதாபிமான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததிலும் பெரும் பங்காற்றியுள்ளது.

இத்தகைய படைப்பிரிவின் வரலாற்றுச் சிறப்பைப் போற்றும் வகையில், பல்லாண்டு கால ராணுவப் பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் பழைய பெயா் அந்தப் பிரிவுக்கு மீண்டும் சூட்டப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்போதைய பெயா் மாற்றத்தால், இப்படைப்பிரிவின் செயல்பாட்டு எல்லைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

‘அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்தியாவின் மேற்கு எல்லை வரையிலான பரந்த கடல் பரப்பை இப்படை தொடா்ந்து கண்காணிக்கும். மேலும், பிராந்திய நட்பு நாடுகளுடன் இணைந்து சுதந்திரமான மற்றும் தடையற்ற கடல் வழியை உறுதி செய்யும் இதன் அடிப்படை நோக்கமும், செயல்பாடுகளும் மாறாமல் தொடரும்’ எனப் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.