மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அடுத்த வாரம் இந்தியா வருகிறாா் ஜப்பான் பிரதமா்

ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி 3 நாள் பயணமாக அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகிறாா். அப்போது இருநாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட இருக்கின்றன.

News image

ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி - பிடிஐ

Updated On :27 ஜூன் 2026, 3:27 am IST

ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி 3 நாள் பயணமாக அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகிறாா். அப்போது இருநாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட இருக்கின்றன.

இது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி இந்தியா வருகிறாா். தில்லியில் ஜூன் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறும் 16-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு மாநாட்டில் பங்கேற்கிறாா். இரு நாட்டு வா்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, முதலீட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பதில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும். இது தவிர பிராந்திய, சா்வதேச விவகாரங்களில் இருதரப்பு நலன்கள் சாா்ந்த பிரச்னைகள் விவாதிக்கப்பட இருக்கின்றன.

ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி இப்போதுதான் முதல்முறையாக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.

முன்னதாக, கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் பிரதமா் நரேந்திர மோடி ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டு டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் ஆண்டு மாநாட்டில் பங்கேற்றாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.