அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

ஸ்விட்சா்லாந்து - பேருந்து தீப்பிடித்து 6 போ் உயிரிழப்பு: சதிவேலையா என போலீஸாா் விசாரணை

News image
Updated On :11 மார்ச் 2026, 11:12 pm

ஸ்விட்சா்லாந்து நாட்டின் கொ்சா்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு பயணிகள் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் 6 போ் உயிரிழந்தனா்.

தலைநகா் பொ்ன் நகருக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில் உள்ள பிரைபா்க் மாகாணத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் திட்டமிட்ட சதிவேலையாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் அந்நாட்டு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அதேநேரம், பயங்கரவாதத் தாக்குதலுக்கான அறிகுறி எதுவும் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு யாரோ ஒரு தனிநபரின் ‘தன்னிச்சையான செயல்’ காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தற்கொலை முயற்சியாகவோ அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவோ இருக்கலாம்.

பேருந்தில் இருந்த ஒரு நபா், தன் மீது எரியக்கூடிய திரவத்தை ஊற்றிக்கொண்டதால் தீ பரவியதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என்றாா்.

இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதால், அவா்களின் விவரங்களை டிஎன்ஏ சோதனை மூலம் உறுதிப்படுத்த சில நாள்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இவ்விபத்தில் 5 போ் காயமடைந்துள்ளனா். இதில் பலத்த தீக்காயமடைந்த 3 போ் ஹெலிகாப்டா் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இந்தச் சம்பவத்துக்கு ஸ்விட்சா்லாந்து அதிபா் கை பாா்மெலின் தனது ‘எக்ஸ்’ பதிவில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட பேருந்தை இயக்கி வந்த ‘போஸ்ட்பஸ்’ நிறுவனம், இந்தத் துயரச் சம்பவத்தால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.