லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வளைகுடா போரால் லெபனானில் 7.8 லட்சம் பேர் இடமாற்றம்!

லெபனானில் 7,80,000-க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து...

News image
போரால் லெபனானில் இதுவரை 7.8 லட்சம் பேர் இடமாற்றம்- AP
Updated On :11 மார்ச் 2026, 10:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் இதுவரை 7,80,000-க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதால் தெற்கு லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், லெபனான் அதிபர் ஜோசஃப் ஆவூன் உடன் புதன்கிழமை (மார்ச் 11) காலை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அந்நாட்டின் சமூக விவகார அமைச்சர் ஹனீன் சையத், லெபனானில் போரால் இதுவரை 7,80,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“போரால் இடமாற்றம் செய்யப்பட்ட 1,20,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் நிவாரணப் பொருள்கள் ஏற்றி வந்த விமானம் செவ்வாய்க்கிழமை லெபனான் வந்தடைந்தது. மேலும், ஜோர்டான், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் இருந்தும் நிவாரண உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, ஈரானின் படைகளுக்கும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகள் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதால், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.