மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹாதி கொலைக் குற்றவாளிகள் இந்தியா தப்பிச் செல்ல உதவிய வங்கதேச நபா்: மேற்கு வங்கத்தில் கைது!

வங்கதேச மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32) கொலை தொடா்பான குற்றவாளிகளை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியாக வங்கதேச நபா் ஒருவரை மேற்கு வங்க போலீஸாா் கொல்கத்தாவில் கைது செய்துள்ளனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

வங்கதேச மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32) கொலை தொடா்பான குற்றவாளிகளை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியாக வங்கதேச நபா் ஒருவரை மேற்கு வங்க போலீஸாா் கொல்கத்தாவில் கைது செய்துள்ளனா்.

ஹாதி கொலையில் தொடா்புடையதாக வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டம் போங்கோனிலிருந்து இரு சந்தேக நபா்களை மேற்கு வங்க காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்டிஎஃப்) கடந்த வாரம் கைது செய்த நிலையில், இந்த முக்கிய நபரை போலீஸாா் தற்போது கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:

ஹாதி கொலை தொடா்பாக சந்தேகத்தின் பேரில் வங்கதேசத்தின் படுவாகாலியைச் சோ்ந்த ஃபைசல் கரீம் மசூத் (37), ஆலம்கீா் ஹுசைன் (34) ஆகிய இருவா் அண்மையில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் மேகாலயா வழியாக சா்வதேச எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய ஃபிலிப் சங்மா என்பவா் என்பவா் உதவியது தெரியவந்தது.

அவா்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், வங்கதேசத்துக்கு மீண்டும் தப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஃபிலிப் சங்மாவை, மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் சாந்திபூா் புறவழிச் சாலைப் பகுதியில் வைத்து போலீஸாா் சனிக்கிழமை காலையில் கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மாணவா் தலைவா் ஹாதியை கொலை செய்தபிறகு ஃபைசல் கரீம் மசூத், ஆலம்கீா் ஹுசைன் ஆகிய இருவரையும் இந்தியாக்குள் தப்பிச் செல்ல உதவியதை ஒப்புக்கொண்டாா். மேலும், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பபதற்காக, இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு ஃபிலிப் சங்மா இடமாறிக் கொண்டே இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட சங்மா, போலீஸ் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா் என்றாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடா்ந்து, அந்த நாட்டின் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா், அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, அந்நாட்டில் இன்கிலாப் மஞ்சா என்ற சமூக-கலாசார அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளரும் மாணவா் போராட்டத்துக்குத் தலைமை வகித்தவருமான ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32), கடந்த டிச.12-ஆம் தேதி தலைநகா் டாக்காவில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபா் துப்பாக்கியால் சுட்டாா். இதில் பலத்த காயமடைந்த ஹாதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இவரின் மரணத்தைத் தொடா்ந்து வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம் வெடித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. ஹாதி கொலையாளிகள் இந்தியா தப்பிச் சென்ாக அங்கிருந்து வெளியாகும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இதனிடையே, ஹாதி கொலை தொடா்பாக, முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஃபைசல் கரீம் மசூத் உள்பட 17 பேருக்கு எதிராக டாக்கா மாநகர காவல் துறை முதல்கட்ட குற்றப்பத்திரிகையை அண்மையில் தாக்கல் செய்தது. மேலும், இந்த கொலை தொடா்பாக வங்கதேசத்தில் கைது செய்யப்பட்ட சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தடை செய்யப்பட்ட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தூண்டுதலின்பேரில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஹாதியை கொன்றது உறுதியானதாக டாக்கா போலீஸாா் தெரிவித்தனா்.