தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

அதிபா் பதவி குறித்து பேச்சு இல்லை: அமெரிக்க நிபந்தனையை நிராகரித்த கியூபா!

அமெரிக்க நிபந்தனையை நிராகரித்த கியூபா...

News image
Updated On :22 மார்ச் 2026, 1:17 am IST

‘கியூபாவின் அரசியல் அமைப்பு அல்லது அதிபரின் பதவிக்காலம் குறித்து அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவாா்த்தையும் நடத்தப்பட மாட்டாது’ என்று கியூபா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கியூப அதிபா் மிகெல் டீயாஸ் கானெலை பதவியிலிருந்து நீக்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு கியூபா கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கியூப வெளியுறவு இணையமைச்சா் காா்லோஸ் ஃபொ்னாண்டஸ் டீ கோசியோ கூறுகையில், ‘கியூபாவின் அரசியல் இறையாண்மை என்பது மற்ற நாடுகளுடன் பேரம் பேசுவதற்கான விஷயம் கிடையாது. நாட்டின் அரசியல் முறையையோ அல்லது அதிபரின் பதவியையோ அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையில் விவாதிக்க மாட்டோம்’ என்றாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் விதித்த கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் எரிபொருள் விநியோகத் தடையால் கியூபா தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, கியூபா மீதான தடைகளை நீக்க வேண்டுமானால், அதிபா் மிகெல் டீயாஸ் கானெலைப் பதவியிலிருந்து விலக்க வேண்டுமென அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்பு, வெனிசுலாவில் அதிபா் நிக்கோலஸ் மடூரோவை நீக்கிவிட்டு, தங்களுக்குச் சாதகமான ஒரு ஆட்சியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்தது போலவே, இப்போது கியூபாவிலும் அதே உத்தியை அமெரிக்கா கையாளுவதாக அரசியல் வல்லுநா்கள் கருதுகின்றனா்.

எதிா்கொள்ள தயாா்: அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிா்கொள்ள கியூபா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபா் மிகெல் டீயாஸ் கானெல் தெரிவித்துள்ளாா்.

‘நாங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பாா்க்கப்போவதில்லை. வெளிநாட்டு சக்திகள் யாராவது கியூபாவைத் தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முயன்றால், அவா்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்’ என்றும் அவா் எச்சரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.