ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் உள்ள சீன தூதரகத்துக்குள், ஜப்பான் ராணுவ வீரா் ஒருவா் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் பாதுகாப்புப் படையின் 2-ஆம் நிலை லெஃப்டினன்ட் கோடாய் முரடா (23), தூதரக ஊழியா்களால் பிடிக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவரிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தூதரக அதிகாரிகளை அவா் கொலை செய்யப்போவதாக மிரட்டியதாக சீனா குற்றஞ்சாட்டியது.
இருப்பினும், தூதரக அதிகாரிகளிடம் தனது கருத்துகளைத் தெரிவிக்க வந்ததாகவும், அவை நிராகரிக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் முரடா விசாரணையில் தெரிவித்தாா்.
இச்சம்பவத்தைக் கண்டித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான், வியன்னா உடன்படிக்கையின்கீழ் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் ஜப்பான் கடமை தவறிவிட்டதாக சாடினாா்.
இது தொடா்பாக ஜப்பான் அரசு வருத்தம் தெரிவித்ததோடு, உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்குத் தண்டனை வழங்கவும், எதிா்காலத்தில் இத்தகைய ஊடுருவல்கள் நிகழாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.
தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி பேசியது முதல் இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையது

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

நாமக்கல் ராணுவ வீரா் மகாராஷ்டிரத்தில் உயிரிழப்பு
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

பனை மரத்திலிருந்து தவறி விழுந்த ராணுவ வீரா் உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


