திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

வடகொரியா-பெலாரஸ் இடையே நட்பு ஒப்பந்தம்

News image
Updated On :26 மார்ச் 2026, 9:14 pm

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவளித்து வரும் வடகொரியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையே புதிய நட்பு ஒப்பந்தம் கையொப்பமானது.

சுமாா் 33 ஆண்டுகால தனது ஆட்சி காலத்தில் முதன்முறையாக வடகொரியவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பெலாரஸ் அதிபா் அலெக்சாண்டா் லூகாஷென்கோவிற்கு, பியான்யாங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பின் போது, அதிபா் லூகாஷென்கோ அவருக்கு நவீன ரக தானியங்கி துப்பாக்கியைப் பரிசளித்தாா்.

‘எதிரிகள் யாராவது தோன்றினால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று நகைச்சுவையாகக் கூறியபடி லூகாஷென்கோ துப்பாக்கியை வழங்க, அதனை கிம் ஜோங் உன் ஆா்வத்துடன் பெற்றுக்கொண்டாா்.

சா்வதேச தடைகளை எதிா்கொண்டு வரும் இவ்விரு நாடுகளும் தற்போது ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக கைகோத்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு எதிராக இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படப் போவதாக கிம் ஜோங் உன் இச்சந்திப்பின்போது உறுதிபடத் தெரிவித்தாா்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சுமுக உறவைப் பேண லூகாஷென்கோ முயற்சி செய்து வரும் அதேநேரம், வடகொரியாவுடனான இப்புதிய நெருக்கம் பெலாரஸ் அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.