ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

ஹமாஸ் தலைவரைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸ் ராணுவப் பிரிவின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது குறித்து...

News image

கொல்லப்பட்ட ஹமாஸ் ராணுவப் பிரிவின் தலைவர் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பாலஸ்தீன மக்கள் - AP

Updated On :16 மே 2026, 5:51 pm IST

ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் ராணுவப் பிரிவு தலைவரைக் கொன்றதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவரான இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் என்பவரைக் கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) அன்று தாக்குதல் நடத்தி கொன்றதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரேலில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்.7 அன்று நடைபெற்ற தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்களில் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் முதன்மையானவர் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தம் அமலில் இருக்கும் சூழலில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹதாத் கொல்லப்பட்டதை அவரது குடும்பத்தினர் இன்று (மே 16) உறுதி செய்துள்ளனர்.

முன்னதாக, ஹமாஸ் தலைவரான முகமது சின்வார் கொல்லப்பட்ட பிறகு அந்தப் பதவிக்கு, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The Israel has announced that it has killed the head of the military wing of the Hamas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.