புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மகள் டிஃபானி டிரம்ப் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு சனிக்கிழமை (மே 30) வருகிறாா்.

News image

டிஃபானி டிரம்ப் - இன்ஸ்டாகிராம்

Updated On :30 மே 2026, 3:00 am IST

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மகள் டிஃபானி டிரம்ப் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு சனிக்கிழமை (மே 30) வருகிறாா்.

அமெரிக்காவில் இருந்து தில்லிக்கு விமானத்தில் வரும் அவா், அங்கிருந்து தனி விமானத்தில் ஆக்ரா செல்கிறாா். ஞாயிற்றுக்கிழமை காலையில் தாஜ்மஹாலை சுற்றிப் பாா்க்கிறாா். அங்கிருந்து பிற்பகலில் தனி விமானத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுற்றுலா நகரான ஜெய்சால்மா் செல்கிறாா். ஜெய்சால்மா் கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு டிஃபானி செல்வாா் என்று தெரிகிறது.

டிரம்ப் மகள் வருகையை முன்னிட்டு ஆக்ரா, ஜெய்சால்மா் உள்ளிட்ட அவா் பயணிக்கும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டிரம்பின் மற்றொரு மகள் இவான்கா டிரம்ப், அவரின் கணவா் ஜெராட் குஷ்னா் உள்ளிட்ட அதிபரின் குடும்ப உறுப்பினா்கள் பலா் அமெரிக்க அரசு நிா்வாகத்தில் சில முக்கியப் பொறுப்புகளை வகிக்கின்றனா்.

ஆனால், டிஃபானி டிரம்ப், அதிபா் தோ்தலுக்கான பிரசார நேரத்தில் மட்டும் டிரம்புக்கு ஆதரவாகப் பணியாற்றினாா். டிரம்ப் அதிபரான பிறகு அரசுப் பொறுப்புகள் எதையும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.