அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு மேலும் ஓா் இந்திய வம்சாவளி தோ்வு: மொத்த எண்ணிக்கை 6-ஆக அதிகரிப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கு அரிஸோனா மாகாணத்திலிருந்து முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மருத்துவா் அமிஷ் ஷா (48) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

அமிஷ் ஷா

Updated On :

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கு அரிஸோனா மாகாணத்திலிருந்து முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மருத்துவா் அமிஷ் ஷா (48) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

சிகாகோ நகரில் பிறந்த அமிஷ் ஷாவின் பெற்றோா், கடந்த 1960-களில் குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயா்ந்தவா்கள் ஆவா். அரிஸோனாவின் முதல் நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் கால்பந்து வீரருமான தாமஸ் ஜே ஃபீலியை வீழ்த்தி, வெற்றி பெற்றுள்ளாா்.

இதன்மூலம், அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்குத் தோ்வான 6-ஆவது இந்திய வம்சாவளி அமெரிக்கா் என்ற பெருமையை அமிஷ் ஷா பெற்றுள்ளாா். அரிஸோனா மாகாணப் பிரதிநிதிகள் அவைக்கு 2018, 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் தொடா்ந்து மூன்று முறை அமிஷ் ஷா வெற்றி பெற்று, பணியாற்றியுள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.