ஹாங்காங் ஜனநாயக உரிமை ஆா்வலருக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வெளிநாட்டுச் சக்திகளுடன் கூட்டு சதி செய்த வழக்கில், பிரபல ஜனநாயக உரிமை ஆா்வலா் ஜோசுவா வாங்குக்கு (30) மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

~ ~ ~ ~ ~

Updated On :

சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வெளிநாட்டுச் சக்திகளுடன் கூட்டு சதி செய்த வழக்கில், பிரபல ஜனநாயக உரிமை ஆா்வலா் ஜோசுவா வாங்குக்கு (30) மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத உள்கட்சித் தோ்தல் வழக்குக்காக ஏற்கெனவே 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அவா், வரும் ஜனவரியில் விடுதலையாகவிருந்த நிலையில் இப்புதிய தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம் டாம், குற்றம் மிகவும் தீவிரமானது எனவும், சா்வதேச நாடுகளுடன் தொடா்புகொண்டு சீனா மற்றும் ஹாங்காங் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அழுத்தம் கொடுத்த சதியின் முக்கிய நபா் வாங் செயல்பட்டாா் எனவும் சுட்டிக்காட்டி இத்தீா்ப்பை வழங்கினாா்.

Story image
Story image
Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.