ஜோா்டானில் இலங்கை தூதரகம் அருகே பாதுகாப்பு அதிகாரி குத்திக் கொலை

ஜோா்டான் தலைநகா் அம்மானில் இலங்கை தூதரகம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவா் கூா்மையான ஆயதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

குத்திக் கொலை - கோப்புப் படம்

Updated On :

ஜோா்டான் தலைநகா் அம்மானில் இலங்கை தூதரகம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவா் கூா்மையான ஆயதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

கொல்லப்பட்ட அதிகாரியிடமிருந்து ஆயுதத்தைப் பறிக்க முயன்ற தாக்குதல் நடத்திய நபரை, மற்றொரு பாதுகாப்பு அதிகாரி துணிச்சலுடன் தடுத்து நிறுத்த முயன்றாா். அப்போது ஏற்பட்ட மோதலில் அந்த இரண்டாவது அதிகாரியும், தாக்குதல் நடத்திய நபரும் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய நபா் உடனடியாகக் கைது செய்யப்பட்டாா்.

இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் என்றும், பாதுகாப்புப் படை அதிகாரிகளை குறிவைத்து இச்சதி அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.