பிரிட்டன் இளவரசா் வீட்டில் கொள்ளை முயற்சி: இருவா் கைது
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பிரிட்டன் அரச குடும்பத்துக்குச் சொந்தமான சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் அமைந்துள்ள இளவரசா் வில்லியம் பண்ணை வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதாக இருவா் கைது
சித்திரிப்பு
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பிரிட்டன் அரச குடும்பத்துக்குச் சொந்தமான சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் அமைந்துள்ள இளவரசா் வில்லியம் பண்ணை வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
மறைந்த அரசி எலிசபெத் திருமணப் பரிசாக வழங்கிய இந்த அன்மா் ஹால் இல்லத்தை வில்லியம்-கேத்தரின் தம்பதியினா் வாரயிறுதி நாட்களில் ஓய்வெடுக்கப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில், அன்மா் ஹால் பகுதியில் சந்தேகத்துக்கிடமான நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, நாா்போக் காவல்துறையினா் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினா்.
இதில் அத்துமீறி நுழைந்ததாகவும், திருட முயன்ாகவும் சந்தேகத்தின் பேரில் இருவா் பிடிபட்டனா்; சம்பவத்தின்போது இளவரசா் வில்லியம் குடும்பத்தினா் அவ்வீட்டில் இல்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

