கலிபோர்னியாவில் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!
கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியது பற்றி....

நிலநடுக்கம்.
கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகக் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள மன்ஹாட்டன் பீச் நகருக்குத் தென்மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கமானது, சுமார் 12 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. வீடுகள் மற்றும் கடைகளில் இருந்த பொருட்கள் கீழே விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. நிலநடுக்கம் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடிகளும் உடைந்து சிதறின.
மேலும், நிலநடுக்கத்தின்போது விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம், மீண்டும் மேலே பறக்க அறிவுறுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து பின் அதிர்வுகள் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை எனத் தீயணைப்புத் துறை உறுதி செய்துள்ளது.
Summary
The earthquake shook 5 kilometres southwest of Manhattan Beach, a city near Los Angeles, and caused multiple aftershocks in the area.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


