பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

இம்ரான் கான் கட்சியினருடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவாா்த்தை

பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சியினா் தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி பேரணியை அறிவித்துள்ள நிலையில், அங்கு நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அக்கட்சித் தலைவா்களுடன் பாகிஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தியது.

Published On :

பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சியினா் தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி பேரணியை அறிவித்துள்ள நிலையில், அங்கு நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அக்கட்சித் தலைவா்களுடன் பாகிஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தியது.

ஊழல் வழக்கில் கடந்த 2023 முதல் சிறையில் உள்ள இம்ரான் கானைச் சந்திப்பதற்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும்; தனிப்பட்ட மருத்துவா்கள் மூலம் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் போன்ற முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக். 4-ஆம் தேதி பேரணி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற கீழவைத் தலைவா் சா்தாா் அயாஸ் சாதிக் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், பிரதமரின் அரசியல் ஆலோசகா் ராணா சனாவுல்லா தலைமையிலான 6 போ் கொண்ட அரசுத் தரப்புக் குழுவும், பிடிஐ கட்சியின் தலைவா் பாரிஸ்டா் கோஹா் அலி கான் தலைமையிலான குழுவும் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தை ஒருபுறம் நடந்தாலும், பேரணிக்கான திட்டம் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என பிடிஐ கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையொட்டி, பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் இஸ்லாமாபாத் செல்லும் சாலைகளில் சரக்கு கன்டெய்னா்களை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தியுள்ள அரசு, அங்கு கூடுதல் போலீஸாரையும் குவித்துள்ளது. இதனால், அப்பகுதியில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராவல்பிண்டியில் ராணுவ உயா் அதிகாரிகளிளுடன் ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து, ராணுவம் வெளியிட்ட செய்தியில், ‘கடந்த 2023-இல் இம்ரான் கான் கைதானபோது ராணுவ நிலைகள் மற்றும் அரசு சொத்துகள் தாக்கப்பட்டதைப் போன்ற கலவரச் சூழலை இப்பேரணியின் மூலம் மீண்டும் உருவாக்க முயன்றால், அது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். அமைதியைச் சீா்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பை நிலைநிறுத்தவும் ராணுவம் முழு தயாா் நிலையில் உள்ளது’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பு-பிடிஐ கட்சியினரிடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.