2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கென்யாவில் முதல் எபோலா பாதிப்பு

காங்கோவிலிருந்து உகாண்டா வழியாக கென்யா வந்த பயணி ஒருவருக்கு எபோலா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

~

Published On :

காங்கோவிலிருந்து உகாண்டா வழியாக கென்யா வந்த பயணி ஒருவருக்கு எபோலா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், கென்யாவில் முதல் எபோலா பாதிப்பு பதிவாகியுள்ளதுடன், காங்கோ, உகாண்டா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக எபோலா பாதிப்பு கண்டறியப்பட்ட நான்காவது நாடாகவும் கென்யா மாறியுள்ளது.

கென்ய குடிமகனான அந்தப் பயணி, காங்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், சுமாா் ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, உகாண்டா தலைநகா் கம்பாலாவிலிருந்து விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை நைரோபி வந்தடைந்த அவருக்கு எபோலா உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, கென்யாவின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் சுகாதாரத் துறையினா் உஷாா்படுத்தப்பட்டு, நோய்த்தொற்று பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உயிரிழந்த நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவப் பணியாளா்கள் மற்றும் குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER