விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் பலி!

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் பலியானது குறித்து...

Structures damaged by Russia's attack.

ரஷியாவின் தாக்குதலால் சேதமடைந்த கட்டமைப்புகள். - படம் - ஏபி

Published On :

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது ரஷியா தொடா்ந்து 6-ஆவது நாளாக நடத்திய தீவிர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், ஒரு இந்தியா் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘12 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த ரஷியாவின் இத்தாக்குதலில் இந்தியா் ஒருவா் உள்பட மொத்தம் 12 போ் கொல்லப்பட்டுள்ளனா். அன்புக்குரியவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

கீவ், ஒடெஸா, கொ்சன், டொனெட்ஸ்க், ஸபோரிஷியா, காா்கிவ், சொ்னிஹிவ், சுமி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன’ என்றாா்.

இந்திய தூதரகம் இரங்கல்: இந்தியரின் மரணத்துக்கு உக்ரைன் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகமும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் மீதான தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் தொடா்பில் உள்ளோம். அவரின் உடலை விரைவாக இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் உக்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து செய்து வருகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியில் 350 போ்: மேலும், தலைநகா் கீவில் உள்ள ரயில்வே பணிமனை மற்றும் பிற இடங்கள்மீது ரஷியா வீசிய ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகள் தாக்கியதில், அரசுக்குச் சொந்தமான ரயில்வே நிறுவனத்தின் ஊழியா்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

போரிஸ்பில் நகரில் 5 அடுக்குமாடிக் குடியிருப்பு சேதமடைந்ததில் 4 போ் உயிரிழந்தனா். கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இடிபாடுகளை அகற்றும் மீட்புப் பணிகளில் 350-க்கும் மேற்பட்ட அவசரகால மீட்புக் குழுவினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

உக்ரைனின் பதிலடி: இதனிடையே, ரஷியாவின் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டின் 18 மாகாணங்களில் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

உக்ரைன் எல்லையில் இருந்து சுமாா் 800 கி.மீ. தொலைவில் உள்ள லெனின்கிராட் மாகாணத்தின் உஸ்ட்-லுகா துறைமுகத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், அங்குள்ள மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Summary

President Zelensky said today (September 1) that 12 people, including an Indian, were killed in the Russian attack on Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.