மேட்டூர் அணை வரலாற்றில் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படுவது இதுவே 4வது முறை!இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புபுகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுதமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்!

நேபாள வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது பற்றி...

nepal flood

நேபாள வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது - AP

Published On :1 செப்டம்பர் 2026, 1:42 pm IST

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 1000-ஐ கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா்கள் 275 போ் உள்பட 3,916-க்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி செவ்வாய்க்கிழமை 7-ஆவது நாளாக தொடா்கிறது.

திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

போடே கோஷி நதி வெள்ளம், திரிசூலி, நாராயணி நதிகளிலும் கலந்து பெரும் சேதத்தை விளைவித்தது. ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி கிழக்கு, நவல்பராசி மேற்கு, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களை புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1000-ஐக் கடந்துள்ளது.

நேபளத்தில் 987 பேரும், திபெத்தில் 16 பேரும் பலியானதாக தேசிய பேரிடா் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இவற்றில் 51 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், 726 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

Dar Yasin

மீட்கப்படும் சடலங்கள் கடுமையாக சிதைந்திருக்கும் நிலையில் அடையாளம் காணும் பணி சவாலாக மாறியுள்ளன. இதனால், மரபணு சேகரிப்புக்குப் பிறகு சர்வதேச விதிகளைப் பின்பற்றி, நேபாள அரசே சடலங்களைப் புதைத்து வருகின்றன.

இதனிடையே, நேபாளத்துக்கு கைலாஷ் யாத்திரை உள்ளிட்ட சுற்றுலாவுக்கு வந்த 30 வெளிநாடுகளைச் சேர்ந்த 583 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை.

இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். மொத்தம் 275 இந்தியக் குடிமக்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேலும் 128 பேரும் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Nepal floods! Death toll crosses 1,000! Search operations for 3,900 people intensify!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.