ரஷிய வான்வெளியை விமான நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும்: ஸெலென்ஸ்கி எச்சரிக்கை!

ரஷிய வான்வெளியை விமான நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என ஸெலென்ஸ்கி தெரிவித்தது குறித்து...

Ukraine's President Volodymyr Zelenskyy listens a journalist question during a joint press conference with Bulgaria's Prime Minister Andrey Gyurov in Kyiv, Ukraine, Monday, March 30, 2026. (AP Photo/Evgeniy Maloletka)

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி - படம் - ஏபி

Published On :2 செப்டம்பர் 2026, 6:22 pm IST

ரஷிய வான்வெளியை விமான நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி புதன்கிழமை (செப். 2) தெரிவித்தார்.

உக்ரைன் - ரஷியா இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய போர் 4 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து வரும் நிலையில், இருதரப்பும் தங்கள் எதிரிகளின் முக்கிய கட்டமைப்பு மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அதிலும் குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக உக்ரைன் தலைநகர் மற்றும் முக்கிய நகரங்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகள் தகர்க்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி அபாயமான பகுதிகளிளில் உள்ள மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவரும் பலியாகியதாக உக்ரைன் அதிபர் நேற்று தெரிவித்திருந்தார். ரஷியாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் தனது ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்த உள்ளது. எனவே, ரஷிய வான்வெளியை விமான நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என ஸெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஸெலென்ஸ்கி வெளியிட்ட விடியோவில் அவர் பேசியதாவது:

ரஷிய வான்வெளியைப் பயன்படுத்தும் அனைத்து விமான நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ரஷிய விமான நிலையங்களைப் பயன்படுத்தும் அனைவரையும் இன்று நாங்கள் எச்சரிக்கிறோம். ரஷிய வான்வெளியானது முற்றிலும் அபாயகரமாக மாறி வருகிறது.

சிவில் விமானப் போக்குவரத்துக்கு உக்ரைன் எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. ஆனால், ரஷிய வான்வெளியில் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்படும். இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரஷிய அதிகாரிகள் இதை முறையாக அறிவிக்கவில்லை என்றாலும், ரஷிய வான்வெளி மூடப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Ukrainian President Zelenskyy stated on Wednesday (Sept. 2) that airlines should avoid Russian airspace.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.