காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்ற தயார்! - இஸ்ரேல்!
அமெரிக்கா ஒப்புதல் அளித்தால் காஸாவிலுள்ள பாலஸ்தீன மக்களை வெளியேற்ற தயார் என இஸ்ரேலிய அமைச்சர் பேச்சு...

காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் - AP
அமெரிக்கா ஒப்புதல் வழங்கினால், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்ற தயார் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்கா ஒப்புதல் வழங்கினால், காஸாவில் உள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்ற தயார் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் இன்று (செப். 2) நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் காட்ஸ், இறுதியில் இந்த இடம்பெயர்வு இல்லாமல் காஸாவுக்கு உண்மையான தீர்வு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“பாலஸ்தீனர்களை வெளியேற்ற கடல் வழியாகவோ, வான் வழியாகவோ அல்லது சாத்தியமான அனைத்து வழிகள் மூலமாகவோ வெளியேற்ற இஸ்ரேலிய அரசு திட்டமிட்டுத் தயாராக இருக்கிறது.
காஸாவை விட்டு வெளியேறவே 80 சதவிகித பாலஸ்தீனர்கள் விரும்புகின்றனர். ஆனால், அவர்களை வெளியேற விடாமல் ஹமாஸ் படைகள் தடுக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காஸா பகுதியிலுள்ள 20 லட்சம் பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது குறிப்படத்தக்கது.
Summary
Israeli Minister Israel Katz has stated that he is ready to evacuate Palestinians from Gaza if the United States grants approval.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






