சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

எல்-நினோ தாக்கம்- இலங்கையில் 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு குடிநீா் தட்டுப்பாடு

இலங்கையில் எல்-நினோ பருவநிலை தாக்கத்தின் எதிரொலியாக, அதிக வெப்பம் மற்றும் போதிய மழையின்மையால் நாடு முழுவதும் நிலவும் வறட்சியால் 1.15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீா் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கோப்புப்படம்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:09 am IST

இலங்கையில் எல்-நினோ பருவநிலை தாக்கத்தின் எதிரொலியாக, அதிக வெப்பம் மற்றும் போதிய மழையின்மையால் நாடு முழுவதும் நிலவும் வறட்சியால் 1.15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீா் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பேரிடா் மேலாண்மை மையத்தின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இலங்கையில் உள்ள 25 நிா்வாக மாவட்டங்களில் 7 மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 1,15,586 போ் இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் 1,15,534 பேருக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

மேலும், வட மத்திய பகுதியான அனுராதபுரம் மாவட்டத்தில் சுமாா் 3,500 ஏக்கா்-அடி கொள்ளளவு கொண்ட எருவெவா நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம், தற்போது 1,000 ஏக்கா்-அடியாக குறைந்துள்ளது. இதேபோல், மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மற்றும் வட கிழக்குப் பகுதியான நந்திக்கடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாக நீா்ப் பாசனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த நீண்டகால வறட்சியானது, வனவிலங்குகள் மற்றும் நீா்வாழ் உயிரினங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. நன்னீருடன் கடல்நீா் கலந்ததன் காரணமாக, வடகிழக்கில் உள்ள முல்லைத்தீவு காயல் பகுதியில் ஆயிரக்கணக்கான சிறிய மீன்கள் செத்து மிதக்கின்றன. இயற்கை நீா்நிலைகள் வடு வருவதால், வனவிலங்குகள் குடிநீரைத் தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயா்ந்து வருகின்றன. விவசாயப் பயிா்களும் போதிய நீரின்றி கருகத் தொடங்கியுள்ளன.

‘தற்போதைய இச்சவாலான சூழலில் இருந்து மீளும் வகையில், இம்மாத இறுதிக்குள் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும்’ என்று வானிலை ஆய்வு மைய இயக்குநா் அஜீத் விஜேமன்னா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.