சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

பிரிட்டன் விமான நிலைய முடக்கத்துக்கு சைபர் தாக்குதல் காரணமல்ல: என்ஏடிஎஸ் விளக்கம்!

பிரிட்டன் விமான முடக்கம் பற்றி அதிகாரிகள் கூறுவது..

Published On :

பிரிட்டன் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணமல்ல என அந்நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து சேவை (என்ஏடிஎஸ்) அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரிட்டன் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். சுமார் 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இரண்டாவது நாளாக இந்த முடக்கம் தொடர்ந்தது.

பிரிட்டனின் மிக முக்கியமான மற்றும் பரப்பாரான விமான நிலையமான ஷீத்ரோ, காட்விக், ஸ்டான்ஸ்டெட், மான்செஸ்டர் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய விமான நிலையங்களில் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதுதொடர்பாக விமான போக்குவரத்துத் துறை கூறுகையில்,

பிரிட்டனில் விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சைபர் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.

தொழில்நுட்ப பிரச்னையை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எங்கள் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். இயல்பு நிலையை விரைவில் மீட்டெடுக்க அவசரமாகப் பணியாற்றி வருகின்றனர். பயணத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான இடையூறுகளை நாங்கள் உணர்கிறோம். அதற்காக மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்துள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலான எங்கள் செயல்பாட்டு வரலாற்றில் இதுபோன்ற ஒரு நிகழ்வை நாங்கள் பார்த்ததில்லை. பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகிய இரண்டிலும் பிரிட்டன் உலகிலேயே மிகச் சிறந்த நற்பெயரைக் கொண்டுள்ளது.

இந்தப் பிரச்னையை சரிசெய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பணி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.