செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

2030-க்குள் செய்யறிவால் மனிதகுலம் அழியும்! ஆந்த்ரோபிக் வல்லுநர் எச்சரிக்கை!

2030-க்குள் செய்யறிவால் மனிதகுலம் அழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பற்றி...

Anthropic researcher warns

2030-க்குள் செய்யறிவால் மனிதகுலம் அழியும் - Photo: Gemini AI

Published On :

செய்யறிவு நிறுவனங்கள் உருவாக்கி வரும் ’சூப்பர்இன்டெலிஜென்ஸால்’ 2030-க்குள் மனிதகுலமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து விலகிய வல்லுநர் ஜேக்கப் காக்ஸன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் முன்னணி செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்திலிருந்து ராஜிநாமா செய்துள்ள வல்லுநர் ஜேக்கப் காக்ஸன், செய்யறிவு நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு உருவாக்கி வரும் ’சூப்பர்இன்டெலிஜென்ஸ்’ குறித்து எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“நான் ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து இன்று ராஜிநாமா செய்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் ஓப்பன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளேன். இந்த இரண்டு நிறுவனங்களும் பொறுப்புடன் செயல்படவில்லை. அவர்கள் மனிதக் கட்டுப்பாட்டைத் தாண்டி, தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும் ’சூப்பர்இன்டெலிஜென்ஸ்’ நோக்கி பயணித்து, நமது உயிர்களுடன் விளையாடுகிறார்கள்.

செய்யறிவை உருவாக்கும் ஆராய்ச்சியாளர்கள், அது 2030-க்குள் நம் அனைவரையும் அழித்துவிடும் என்று நம்புகிறார்கள். இது ஒரு சந்தைப்படுத்தல் தந்திரம் அல்ல. சொல்லப்போனால், பல ஏஐ நிறுவன நிர்வாகிகளும் மூத்த ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகைகளில் பேசும்போது, தங்கள் வார்த்தைகளை அறிவுப்பூர்வமாகத் தோன்றும் வகையில் பேசுவார்கள். ஆனால் அதே நபர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்கிறேன்.

ஓப்பன்ஏஐ, மனித நாகரிகத்திற்கு ஏற்படக்கூடிய அபாயங்களை ஆழமாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆந்த்ரோபிக்கில் அபாயங்களை நன்கு புரிந்து கொண்டாலும், முதலில் அதை அடைவதற்கான பந்தயத்தில் சிக்கியுள்ளனர்.

அடுத்த சில ஆண்டுகள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் பரிசீலிக்குமாறு ஏஐ ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொள்கிறேன். முழுமையான புரிதல் இல்லாமல் சூப்பர்இன்டெலிஜென்ஸ் சோதனையைத் தொடங்க விரும்புகிறீர்களா? இது எப்படியும் நடக்கத்தான் போகிறது என்று தலைகுனியப் போகிறீர்களா? அல்லது இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி மாறுபட்ட நிபந்தனைகளுக்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Humanity will be destroyed by AI by 2030! Anthropic researcher warns!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.