செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

டிரம்ப்பைவிட அதிக சம்பளம் வாங்கும் பிரதமர்கள் யார் எவர்?

உலகத் தலைவர்களின் மாதச் சம்பளம் பற்றி...

US President Donald Trump.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம் - ஏபி

Published On :

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைவிட அதிக சம்பளம் வாங்கும் ஒரு நாட்டின் தலைவராக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வலம்வருகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மாதச் சம்பளமாக 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பின்படி, ரூ. 3.80 கோடியாகும். 1999-க்குப் பிறகு அமெரிக்காவில் அதிபரின் சம்பளம் உயர்த்தப்படவில்லை.

இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் மாதச் சம்பளம் 22 லட்சம் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், தற்போது 36 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின்படி ரூ. 26.55 கோடியாகும்.

இதுதொடர்பான அறிவிப்பை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று வெளியிட்டார். வருகின்ற அக். 15 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவரின் முந்தைய சம்பளத்தில் இருந்து 60% கூடுதலாகும்.

திறமையானவர்களைப் பொதுச் சேவைக்கு ஈர்ப்பதற்கும், சிறந்த நிர்வாகத்தைப் பேணுவதற்கும் ஒரு வழியாக, அரசியல்வாதிகளுக்கான அதிக ஊதிய முறையை சிங்கப்பூர் அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது.

அதிக சம்பளம் வாங்கும் உலகத் தலைவர்கள்

ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீ - ரூ. 6.84 கோடி

சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் - ரூ. 5.76 கோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரூ. 3.80 கோடி

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் - ரூ. 5.5 லட்சம்

சீன அதிபர் ஜின்பிங் - ரூ. 1.75 லட்சம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி - ரூ. 1.16 லட்சம்

Summary

Which Prime Ministers earn a higher salary than Trump?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.