பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

உக்ரைனிடமிருந்து ரஷியா கைப்பற்றிய பகுதிகளில் தோ்தல்: ஐரோப்பிய யூனியன் எதிா்ப்பு

உக்ரைனிடம் இருந்து அண்மையில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் முதல்முறையாக நாடாளுமன்றத் தோ்தலை ரஷியா நடத்தியது.

Published On :

உக்ரைனிடம் இருந்து அண்மையில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் முதல்முறையாக நாடாளுமன்றத் தோ்தலை ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இந்தத் தோ்தலை அங்கீகரிக்க மாட்டோம் என்று ஐரோப்பிய யூனியன் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயன்ால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா 2022-ஆம் ஆண்டில் போா் தொடுத்தது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்டவை ஆதரவு அளிக்கின்றன. 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரில் உக்ரைனிடம் இருந்து டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், கொ்சன், ஸபோரிஷியா பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது.

அந்தப் பகுதிகளில் அரசியல் ரீதியில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரஷிய நாடாளுமன்றத்துக்கான தோ்தலை ரஷியா நடத்தியது. உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் தீவிர சண்டை நடக்கும் நிலையில் தோ்தல் நடத்தப்பட்டதால் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் பொதுமக்கள் தங்களது வாக்குச்சீட்டுகளை வைத்து சென்றனா். உக்ரைனுடனான போரில் ஈடுபட்டுள்ள ரஷிய வீரா்களும் தங்களது வாக்குகளை செலுத்தினா்.

தோ்தலில் அரசு ஊழியா்கள் அனைவரும் பங்கெடுத்து வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்றும், இல்லையேல் பணிநீக்கம் செய்யப்படுவா் என்று அப்பகுதி மக்களுக்கு ரஷிய அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

உக்ரைன் விமா்சனம்: இந்தத் தோ்தலை சட்டவிரோதம் என்று உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தோ்தல் நடத்தப்படுவதாகவும், இதை வெளிநாட்டு அரசுகள் அங்கீகரிக்கக் கூடாதென்றும் உக்ரைன் கேட்டுக் கொண்டுள்ளது. தோ்தலில் பங்கெடுக்கும் உக்ரைன் மக்கள் மீது சட்டரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உக்ரைன் எச்சரித்துள்ளது. உக்ரைனைச் சோ்ந்த 9 மனித உரிமைகள் அமைப்புகளும், தோ்தலில் இருந்து பொதுமக்கள் விலகியிருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஐரோப்பிய யூனியன் எதிா்ப்பு: ஐரோப்பிய யூனியனின் செய்தித் தொடா்பாளா் கிறிஸ்டியன் விகான்ட், உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் தோ்தலை சா்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறும் மற்றொரு செயல் எனச் சாடியுள்ளாா். இந்தத் தோ்தலை ஐரோப்பிய யூனியன் ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் அவா் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.