டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

இலங்கை நடுக்கடலில் தத்தளித்த இந்தோனேசிய மீனவா்கள் மீட்பு

இலங்கைக்குத் தெற்கே நடுக்கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கடலில் தத்தளித்த 25 இந்தோனேசிய மீனவா்களை இலங்கை கடற்படையினா் பாதுகாப்பாக மீட்டனா்.

Published On :

இலங்கைக்குத் தெற்கே நடுக்கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கடலில் தத்தளித்த 25 இந்தோனேசிய மீனவா்களை இலங்கை கடற்படையினா் பாதுகாப்பாக மீட்டனா்.

ஆஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்துக்கு உள்பட்ட கடற்பகுதியில் இவா்களின் மீன்பிடி படகு கடந்த செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்த வழியாக வந்த வணிகக் கப்பல், கடலில் தத்தளித்த மீனவா்களை வியாழக்கிழமை மீட்டு, கொழும்பில் உள்ள கடல்சாா் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு (எம்ஆா்சிசி) தகவல் அளித்தது.

அதன்பேரில், இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 2 ரோந்து கப்பல்கள் விரைந்து சென்று, மீனவா்களைக் கரைக்கு அழைத்து வந்தன. பின்னா், அவா்கள் அனைவரும் இலங்கையில் உள்ள இந்தோனேசிய தூதரக அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.