பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்போல் வால்ட் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்!ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

ஹௌதி-சௌதி போரில் தலையீடு? பாகிஸ்தான், துருக்கிக்கு அவசர அழைப்பு!

பாகிஸ்தான் மற்றும் துருக்கி அரசுகளுக்கு சௌதி அரேபியா அவசர அழைப்பு...

trilateral defense agreement in Mecca

மெக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துருக்கி, சௌதி மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள்... - AP | கோப்புப் படம்

Published On :

ஹௌதிகளுடன் சௌதி அரேபியா போரில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளின் ராணுவத் தளபதிகள் சௌதிக்கு அவசர பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனில் ஹௌதி கிளர்ச்சிப்படைகளுக்கும், சௌதி அரசின் ஆதரவு பெற்ற அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல்கள் வெடித்துள்ளன. யேமனில் ஹௌதி படைகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் சௌதி மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், முத்தரப்பு ஒப்பந்தமான மெக்கா உடன்படிக்கையை உடனடியாகச் செயல்படுத்துவது குறித்து அவசரக் கூட்டம் நடத்த பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் அரசுகளுக்கு சௌதி அரசு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, துருக்கி ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் செல்சுக் பைராக்தாரோக்லு சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்துக்குச் செல்வதாக, துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று (செப். 25) அறிவித்துள்ளது.

இதேபோல், பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஆசிம் முனீரும் சௌதிக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

it has been reported that military chiefs from Pakistan and Turkey are undertaking urgent visits to Saudi Arabia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.