
வளைகுடா போரில் களமிறங்கும் பாகிஸ்தான்? சௌதி மீதான ஹௌதி தாக்குதலுக்கு கண்டனம்!
சௌதி அரேபியா மீதான ஹௌதி படைகளின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து...

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் - AP
சௌதி அரேபியாவின் மீதான யேமனின் ஹௌதி கிளர்ச்சிப் படையின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
சௌதி அரேபியாவின் பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஹௌதி படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 8) தாக்குதல் நடத்தின. பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 73 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
யேமனின் ஜாவ்ஃப் மாகாண சிறைச்சாலை மீதான சௌதி ஆதரவு படைகளின் தாக்குதலில் சிறுவன் உள்பட 7 போ் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹௌதி படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சௌதி அரேபியா மீதான ஹௌதிகளின் தாக்குதலுக்கு அந்நாட்டுடன் பாதுகாப்புக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதுபற்றி, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறுகையில்,
“மக்கா பாதுகாப்புக் கூட்டணியின் முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்படும். இது மூன்று நாடுகளும் மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கான வன்முறை சார்ந்த ஒப்பந்தம் அல்ல.
ஆனால், ஏதேனும் ஒரு கூட்டணி நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மூன்று நாடுகளும் இணைந்து அதற்குப் பதிலடி கொடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து மக்கா பாதுகாப்புக் கூட்டணி உருவாக்கி முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மேலும், ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹௌதி படைகளும் இந்தப் போரில் சௌதி அரேபியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்து, சௌதிக்கு ஆதரவாக துருக்கி மற்றும் பாகிஸ்தான் இந்தப் போரில் களமிறங்கக் கூடும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
The Pakistan government has condemned the attack by Yemen's Houthi rebel forces on Saudi Arabia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





