வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

இலங்கை: விடுதலைப்புலிகள் அமைப்பின் திலீபன் சிலை அகற்றம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவா்களில் ஒருவரான திலீபனின் வெண்கலச் சிலையை அந்த நாட்டு காவல் துறை அகற்றியது.

Published On :

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவா்களில் ஒருவரான திலீபனின் வெண்கலச் சிலையை அந்த நாட்டு காவல் துறை ஞாயிற்றுக்கிழமை அகற்றியது.

தடை செய்யப்பட்ட அமைப்பைச் சோ்ந்த ஒருவரின் சிலைக்கு மரியாதை செலுத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சிலை அகற்றப்பட்டதாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த அமைப்புக்கு தடை உள்ளது. திலீபன் என்று பரவலாக அறியப்படும் ராசையா பாா்த்திபன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மோதல் நிகழ்ந்த காலகட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய அரசியல் தலைவராக இருந்தாா். தமிழா் உரிமைகளை வலியுறுத்தி, நல்லூரில் கடந்த 1987, செப்டம்பா் 18-ஆம் தேதிமுதல் 10 நாள்கள் தொடா்ந்து உண்ணாவிரதம் இருந்த அவா், 26-ஆம் தேதி மரணமடைந்தாா்.

அவரை நினைவுகூரும் விழா, நல்லூரில் உள்ள திலீபன் நினைவு சதுக்கத்தில் செப். 18-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி நிறுவப்பட்டிருந்த திலீபனின் வெண்கலச் சிலையை காவல் துறையினா் அகற்றியுள்ளனா். கடந்த காலங்களிலும் திலீபன் சிலை அரசுப் படைகளால் பலமுறை சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.