தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்தேர்தல் ஆணையம் நோக்கி அக். 6 பேரணி! போராட்டங்களை அறிவித்த இந்தியா கூட்டணி!ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

விமானிகள் இடையே மோதல்! இஸ்ரேல் சென்ற துபை விமானம் சௌதியில் அவசர தரையிறக்கம்!

துபையில் இருந்து இஸ்ரேலுக்கு இயக்கப்பட்ட விமானம் சௌதியில் அவசர தரையிறக்கம்...

FlyDubai

துபையில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்... - கோப்புப் படம் | AP

Published On :

நடுவானில் விமானிகள் மோதிக்கொண்டதால் துபையில் இருந்து இஸ்ரேலுக்கு இயக்கப்பட்ட விமானம் சௌதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து புதன்கிழமை (செப். 30) பிற்பகல் இஸ்ரேலுக்குப் புறப்பட்ட ஃபிளைதுபை நிறுவனத்தின் பயணிகள் விமானம், சௌதி அரேபியாவின் தபூக் நகரத்தில் உள்ள பயணிகள் மற்றும் ராணுவ விமானத் தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் புறப்பட்ட சுமார் இரண்டரை மணிநேரத்தில் விமானிகள் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விமானிகளின் மோதலுக்கான காரணம் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

அந்த விமானத்தில் ஏராளமான இஸ்ரேலியர்கள் பயணித்ததைத் தொடர்ந்து, ரேடாரில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் தங்களின் குடிமக்கள் கடத்தப்பட்டிருக்கலாம் எனும் அச்சத்தில் இஸ்ரேல் அரசு போர் விமானங்களை அனுப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, அந்த விமானம் தற்போது சௌதி படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும், இஸ்ரேலிய பயணிகளை அவர்களின் தாயகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமீரகம் மற்றும் இஸ்ரேல் அரசுகள் இடையேயான உறவுகள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இயல்புநிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து துபை உள்ளிட்ட நகரங்கள் இஸ்ரேலியர்களின் முதன்மையான சுற்றுலாத் தலமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A flight operating from Dubai to Israel made an emergency landing in Saudi following a mid-air altercation between the pilots.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.