
‘இவர் ஒரு மான்ஸ்டர்; ஆனால், யாருக்கும் தெரியாது’.. சுந்தர் பிச்சையை புகழந்த அதிபர் டிரம்ப்!
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற டெக் நிர்வாகிகள் சந்திப்பில் கூகுள் நிர்வாக செயல் இயக்குநர் சுந்தர் பிச்சைக்கு டிரம்ப் புகழாரம்...
அதிபர் டிரம்ப் - சுந்தர் பிச்சை.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற டெக் நிர்வாகிகள் சந்திப்பில் கூகுள் நிர்வாக செயல் இயக்குநர் சுந்தர் பிச்சைக்கு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்யறிவு பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் முன்னணி டெக் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உலகப் பெரும் பணக்காரரும் முன்னணி டெக் நிர்வாகியுமான எலான் மஸ்க், மெட்டா நிறுவனர் மார்க் ஸூக்கர்பர்க், கூகுள் நிர்வாக செயல் இயக்குநர் சுந்தர் பிச்சை, ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Trump: This guy (Sundar Pichai) is a monster, and nobody knows him. What a great life! To be a Monster and not have to go through this. All you have to know is â sundarr! Sundar is his name. pic.twitter.com/smlS58lQdW https://t.co/1swuCa4RYT
— Nicholas Mugalli (@RealNickMugalli) September 29, 2026
டெக் நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பிறகு வெஸ்ட் விங்கிற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், அங்கு டெக் நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்திப் பேசினார்.
டிரம்ப் அவரிடம், “சுந்தர், நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்க, அதற்கு சுந்தர் பிச்சை, “நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்…” என்று பேசத் தொடங்கியபோது, திடீரென குறுக்கிட்ட அதிபர் டிரம்ப், “இவன் ஒரு மான்ஸ்டர்; ஆனால், யாருக்கும் தெரியாது” என்றார்.
தொழில்நுட்பத் துறையில் சுந்தர் பிச்சையின் செல்வாக்கையும் வெற்றியையும் பாராட்டும் விதமாக பேசிய டிரம்ப்க்கு உடனடியாக பதிலளித்த சுந்தர் பிச்சை, “மான்ஸ்டர் என்பது சிறந்த டேக்லைன்” என்றதும் அங்கு சிரிப்பலை உருவானது.
அதிபர் டிரம்ப், சுந்தர் பிச்சை உள்ளிட்டோரின் விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
Summary
A video of Donald Trump making an unusual compliment about Google CEO Sundar Pichai has surfaced online, capturing the Indian-origin executive’s reaction to the president’s unexpected remark.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





