FOLLOW US

ON GOOGLE DISCOVER

தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

நடிகர் கார்த்தியை இயக்கும் சுந்தர். சி!

நடிகர் கார்த்தியின் புதிய திரைப்படம் குறித்து...

நடிகர் கார்த்தி, இயக்குநர் சுந்தர். சி

Published On :2 செப்டம்பர் 2026, 12:58 pm IST

இயக்குநர் சுந்தர். சி நடிகர் கார்த்தி கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது.

வா வாத்தியார் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி சர்தார் - 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப். 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் டீசர், டிரைலர் காட்சிகள் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையே, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது பெரிய பட்ஜெட்டில் பீரியட் திரைப்படமாக உருவாகி வருகிறது.

மேலும், நடிகர் கார்த்தி தன் 30-வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். மேட் (mad) திரைப்பட பாகங்களை இயக்கிய கல்யாண் சுந்தர் இப்படத்தை இயக்க, நாயகியாக மீனாக்‌ஷி சௌத்ரி நடிக்கிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். இந்த நிலையில், இயக்குநர் சுந்தர். சி நடிகர் கார்த்தியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். இப்படம் முழு கமர்சியல் நகைச்சுவை படமாக உருவாகும் எனத் தெரிகிறது.

A new film is being made featuring the collaboration of director Sundar C. and actor Karthi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.